H-1B visa... எலோன் மஸ்கால் இரண்டுபட்ட டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள்
அமெரிக்காவில் H-1B visa பயன்பாடு தொடர்பில் கடும் விவாதம் எழுந்துள்ள நிலையில், எலோன் மஸ்கின் முடிவுக்கு டொனால்டு ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
போராடுவேன் என மஸ்க்
டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் சிலரால் எதிர்க்கப்பட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப ஊழியர்களுக்கான H-1B visa திட்டத்தை அவர் முழுமையாக ஆதரிப்பதாகவே அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழில்நுட்ப ஊழியர்களுக்கான H-1B visa திட்டத்தை ஆதரித்து எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன் என எலோன் மஸ்க் அறிவித்த நிலையிலேயே ட்ரம்பும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
டொனால்டு ட்ரம்பின் முதல் நான்காண்டு ஆட்சியின் போதே H-1B visa எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். ஆனால் தற்போது H-1B visa திட்டத்தை எலோன் மஸ்க் ஆதரித்துள்ளதை குறிப்பிட்டு,
அவரது நிறுவனங்களில் H-1B visa பயனாளர்கள் இருப்பதாகவும், H-1B visa திட்டத்தில் அவருக்கு நம்பிக்கை உண்டு என்றும், பலமுறை மஸ்க் பயன்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரி
தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலோன் மஸ்க் அமெரிக்கா குடியுரிமை பெறுவதற்கு முன்னர் H-1B visa பயனாளராக இருந்துள்ளார். 2024ல் மட்டும் எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் 724 H-1B visa அனுமதியை பெற்றுள்ளது.
H-1B visa-ன் காலாவதி என்பது மூன்றாண்டுகள் ஆகும். பயனர்கள் தேவை என்றால் நீட்டித்துக்கொள்ளலாம் அல்லது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வார தொடக்கத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்திய அமெரிக்கரை ட்ரம்ப் தெரிவு செய்ததை விமர்சித்த தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் திடீரென்று கருத்து மோதல் வெடித்தது. H-1B visa எதிர்ப்பாளர்களான இவர்கள், புலம்பெயர்வதை மேற்கத்திய நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாகவே கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |