ரூ 84,000 கோடி இழப்பீட்டு கேட்டு செய்தி நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த ட்ரம்ப்
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பேட்டி திருத்தப்பட்டது மற்றும் தேர்தல் தலையீடு என குறிப்பிட்டு CBS செய்தி ஊடகம் மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இஸ்ரேல் நடவடிக்கை
இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றி ஹாரிஸிடம் எழுப்பிய கேள்வி தொடர்பில் CBS செய்தி ஊடகம் இரண்டு வெவ்வேறு பதில்களை ஒளிபரப்பியதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அத்துடன் அக்டோபர் 6ம் திகதி ஒளிப்பரப்பான 60 நிமிட காணொளியில் இஸ்ரேல் அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஜோ பைடன் நிர்வாகத்தின் செல்வாக்கு தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த பதில் இல்லை என்றும் ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.
குறித்த நேர்காணலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏன் அமெரிக்காவிற்கு செவி சாய்க்கவில்லை என்று ஹாரிஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிக விளக்கமான பதிலளித்திருந்தார். ஆனால், அவரது பதில் தெளிவாக இல்லை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேலி செய்தனர்.
ரூ 84,000 கோடி இழப்பீட்டு
ஆனால் அடுத்த நாள் ஒளிப்பரப்பான இதே நேர்காணலில், இஸ்ரேல் தொடர்பான கேள்விக்கு கமலா ஹாரிஸ் சுருக்கமாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்கத் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, வியாழன் அன்று டெக்சாஸின் வடக்கு மாவட்டத்தில் ட்ரம்பின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிட்டு, CBS செய்தி ஊடகம் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இழப்பீடாக CBS செய்தி ஊடகம் 10 பில்லியன் டொலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ 84,000 கோடி இழப்பீட்டு வழங்க வேண்டும் என்றும், அத்துடன் விரிவான நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |