ட்ரம்பின் 31 வயது தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை! அலறியடித்து ஓடிய மாணவர்கள்.. அதிர்ச்சி வீடியோ
டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்லி கிர்க் படுகொலை
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரும், செல்வாக்குமிக்கவருமான சார்லி கிர்க் 10ஆம் திகதி, கல்லூரியில் பேசிக்கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனை "அரசியல் படுகொலை" என ஆளுநர் குறிப்பிட்டார்.
31 வயதேயான சார்லி கிர்க் (Charlie Kirk) சுட்டுக்கொள்ளப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ட்ரம்ப், தேசிய துக்கமாக அனுசரித்து நாடு முழுவதும் வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டார்.
இதற்கிடையில் சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டபோது மாணவர்கள் அலறியடித்து ஓடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |