முகத்தை மூடியபடி நிற்கும் சுதந்திர தேவி சிலை: ட்ரம்ப் ஆதரவாளர்கள் கோபம்
பிரான்ஸ் நாட்டில், சுதந்திர தேவி சிலை முகத்தைக் கைகளால் மூடியபடி நிற்கும் ஓவியம் ஒன்று ட்ரம்ப் ஆதரவாளர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
முகத்தை மூடியபடி நிற்கும் சுதந்திர தேவி சிலை
பிரான்சிலுள்ள Roubaix நகரில், சுதந்திர தேவி சிலை தன் கைகளால் தன் முகத்தை மூடியபடி நிற்பதுபோல் ஒரு பிரம்மாண்ட உருவத்தை ஜூடித் (Judith de Leeuw) என்னும் ஓவியக் கலைஞர் வரைந்துள்ளார்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி செய்யும் அடாவடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அந்த ஓவியத்தை வரைந்த ஜூடித், சுதந்திர தேவி சிலை சுதந்திரத்துக்கு அடையாளமாக நிறுவப்பட்ட சிலை, ஆனால், இன்று புலம்பெயர்ந்தோரின் சுதந்திரம் எட்டாக்கனியாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
சுதந்திர தேவி சிலைக்கும் புலம்பெயர்தலுக்கும் பல தொடர்புகள் உள்ளன. சொல்லப்போனால், வரலாற்றின்படி அமெரிக்கர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள், அல்லது, புலம்பெயர்ந்தவர்களின் சந்ததியார்தான்.
மேலும், இந்த ஓவியம் வரையப்பட்டுள்ள Roubaix நகரும் புலம்பெயர்ந்தோர் அதிகம் வாழும் ஒரு நகரமாகும்.
இன்னொரு முக்கிய விடயம், அமெரிக்கா சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடும் வகையில், சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்குக் கொடுத்ததே பிரான்ஸ் நாடுதான்.
ஆக, இப்படி புலம்பெயர்தல் மற்றும் சுதந்திரத்துடன் தொடர்புடைய சுதந்திர தேவில் சிலை இருக்கும் அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி, புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியத்தை வைந்துள்ளார் ஜூடித்.
இந்நிலையில், அந்த ஓவியம் ட்ரம்ப் ஆதரவாளர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க அரசியல்வாதியான Tim Burchett என்பவர், இது அருவருப்பை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளதுடன், பிரான்சை மோசமான வார்த்தைகளால் விவரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |