ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ட்ரம்ப்... ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்த இமானுவல் மேக்ரான்
ஐரோப்பாவில் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான யூரோ பணத்தை அமெரிக்க ஆயுதங்களை மட்டுமே வாங்கப் பயன்படுத்தக்கூடாது என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஐரோப்பா நாடுகளை எச்சரித்தார்.
அதிகம் செலவிட வேண்டும்
உள்நாட்டிலேயே வளர்ந்துவரும் பாதுகாப்புத் தொழில்களில் அதிக முதலீடு தேவை என்றும் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவுகளுக்காக அதிகம் செலவிடுவதில்லை என டொனால்டி ட்ரம்பால் அதிகம் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், ஐரோப்பா கண்டம் பாதுகாப்பு தேவைகளுக்காக அதிகம் செலவிட வேண்டும் என மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், நமது எதிரிகளுக்காக நாம் அதிகம் செலவிட வேண்டும் என கூறும் போது, பல நாடுகள் பெரும்பாலும் அமெரிக்க ஆயுதங்களுக்கு பெரும் நிதியை செலவிடுகிறார்கள் என்றார்.
பாதுகாப்பு தொழிற்சாலைகள் அதிகம் கொண்டுள்ள பிரான்ஸ் அடிக்கடி முன்வைக்கும் குற்றச்சாட்டு என்பது, பிரெஞ்சு அல்லது ஐரோப்பிய நாடுகளில் வாய்ப்பு இருக்கும்போது எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதே.
2022ல் வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை அமெரிக்காவில் இருந்து வாங்கவும், பிரான்ஸ் மற்றும் இத்தாலியை தவிர்த்து இஸ்ரேலிய வன்பொருள் வாங்க ஜேர்மனி முடிவு செய்ததும் மேக்ரானை கொந்தளிக்க வைத்திருந்தது.
ஐரோப்பாவில் அமைதி நிலவ
ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய பாதுகாப்புத் துறையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மேக்ரான் கூறியுள்ளார். ஐரோப்பா தனது கடற்படைத் தொழிலுக்கு 47 வெவ்வேறு தொழில்துறை நிறுவனங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்காவிடம் ஆறு மட்டுமே உள்ளது என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பாவிற்கும் மொத்த உலக நாடுகளுக்கும் ரஷ்யா நீண்ட காலத்திற்கு பாதுகாப்பு சவாலாக இருக்கும் என்று மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் ரஷ்யா - உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவருவேன் என்ற ட்ரம்பின் பேச்சை கிண்டலடித்துள்ள மேக்ரான்,
நம்மை நாமே முட்டாளாக்க வேண்டாம், இந்த மோதல் நாளை அல்லது நாளை மறுநாள் தீர்க்கப்படும் சூழலில் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் அமைதி நிலவ ஐரோப்பியர்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |