விமான விபத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிநீக்கம்: ட்ரம்ப் அதிரடி
வாஷிங்டனில் விமானமும் ராணுவ ஹெலிகொப்டரும் மோதி விபத்து நிகழ்ந்த நேரத்திலேயே பல்வேறு கோபக் கேள்விகள் எழுப்பியிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
தற்போது, ஃபெடரல் விமானத் துறை பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.
நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிநீக்கம்
ரேடாரில் பணி செய்பவர்கள், விமானம் தரையிறங்குதல் மற்றும் வழிகாட்டும் பொறுப்பிலிருக்கும் பணியாளர்கள் என ஏராளமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுவருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், இப்படி திடீரென விமானப் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதால் கடும் பணியாளர் தட்டுப்பாடு ஏற்படும்.
அத்துடன், ரகசிய ரேடார் அமைப்பில் பணி புரிந்தவர்கள், ஏவுகணைகள் நாட்டை நோக்கி வருவதையும் கண்காணிக்கும் முக்கிய பொறுப்பிலிருந்தவர்கள்.
தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்னும் கடும் அச்சத்திலிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |