வரி விதிப்பு... ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரித்தானியாவையும் மிரட்டும் ட்ரம்ப்
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீதான வரி விதிப்பு குறித்து அறிவிப்புகள் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரித்தானியாவையும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்.
மிரட்டும் ட்ரம்ப்
ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரிகள் விதிப்பது தொடர்பில் மிரட்டியுள்ள ட்ரம்ப், அது நிச்சயம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
என்றாலும், பிரித்தானியாவை பொருத்தவரை நிலைமையை ஆய்வு செய்து முடிவுக்கு வரலாம் என்று கூறியுள்ள ட்ரம்ப், பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மருடனான தனது உறவு நன்றாக இருப்பதாகவும், ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைமை அப்படி இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஊர் இரண்டுபட்டால்...
பிரித்தானிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்ல உறவை ஏற்படுத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், ட்ரம்பின் கருத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ட்ரம்ப் இப்படி மிரட்டுவதற்கு முன்புதான், பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர், தான் அமெரிக்காவுடன் வலுவான வர்த்தக உறவை உருவாக்க முயற்சிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |