ட்ரம்ப் வரி விதிப்பால் பிரித்தானியாவில் 25,000 பேர் வேலையிழக்கும் அபாயம்
ட்ரம்பின் வரி விதிப்பால், பிரித்தானியாவில் கார் உற்பத்தி துறையில் மட்டுமே 25,000க்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
25,000 பேர் வேலையிழக்கும் அபாயம்
வரி விதிப்பு என்னும் விடயத்தை ஆயுதம்போல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அடுத்து என்ன வரி விதிப்பாரோ என்ற அச்சத்திலேயே பல நிறுவனங்கள் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்துள்ளன.
இந்நிலையில், ட்ரம்பின் வரி விதிப்புகளால், பிரித்தானிய கார் உற்பத்தி துறை நிலைகுலைந்துபோகும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் துறைசார் நிபுணரான ப்ரணேஷ் நாராயணன்.
ட்ரம்பின் வரிவிதிப்புகளால் பல ஆயிரம் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அதனால் அரசின் வளர்ச்சி திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார் அவர்.
அத்துடன், ட்ரம்பின் வரிவிதிப்புகளால் ஏற்பட இருக்கும் வர்த்தகப்போரால், உலக பொருளாதாரத்துக்கு ஒரு ட்ரில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார் Aston Business School பேராசிரியரான Jun Du என்பவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |