எதிரிக்கு எதிரி நண்பன்... ட்ரம்பால் மாறும் கனடா இந்திய உறவுகள்
கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பாதிக்கப்பட்ட கனடா இந்திய உறவுகள் மேம்பட, ட்ரம்ப் மறைமுகமாக உதவியுள்ளார்.
கனடா இந்திய உறவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்காமல், வெளிப்படையாக இந்தியா மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இரு நாடுகளும் மற்ற நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்றின. ஆனால், கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் கனடா இந்திய உறவு மேம்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆம், மீண்டும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை அனுப்ப இரு நாடுகளும் திட்டமிட்டுவருகின்றன.
எதிரிக்கு எதிரி நண்பன்...
இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்தான் எனலாம். அதாவது, கனடா மீது கூடுதல் வரிகள் விதித்துள்ள ட்ரம்ப், இந்தியாவையும் குறிவைத்துள்ளார்.
ட்ரம்பின் வரிவிதிப்பு, பல நாடுகளுக்கிடையே உறவுகளை மேம்படுத்திவருகிறது. இந்தியாவும் கனடாவும் கூட அதற்கு விதிவிலக்கல்ல.
ஆம், ஒத்த கருத்துக்கள் கொண்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்திக்கொள்ள கனடா விரும்புகிறது என்று கூறியுள்ள கனடா பிரதமரான மார்க் கார்னி, இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
ஆக, ட்ரம்பின் வரிவிதிப்பு, கனடா இந்திய உறவுகள் மேம்பட மறைமுகமாக உதவியுள்ளது எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |