கனேடிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரிவிதிப்பு: ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு
கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வரிவிதிப்பு தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு
தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
பின்னர், 30 நாட்களுக்கு வரிவிதிப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்திருந்தார் அவர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் கனடா மற்றும் மெக்சிகோ உட்பட, எந்தெந்த நாடுகளிலிருந்தெல்லாம் ஸ்டீல் மற்றும் அலுமியம் இறக்குமதி செய்யப்படுகிறதோ அந்த நாடுகள் மீதெல்லாம் 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
அது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கனேடிய ஸ்டீல் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான கேத்தரின் (Catherine Cobden), ட்ரம்ப் கூறுவதுபோல் வரிவிதிக்கப்படுமானால், அது அழிவுகரமான விடயமாக அமைவதுடன், இரண்டு நாடுகளுக்கும் சவாலான விடயமாகவும் அமையும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், இந்த வரிவிதிப்பிலிருந்து கனடா வரிவிதிப்பு கோரவேண்டும் என்று கூறியுள்ள அவர், அப்படி கனடாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லையானால், பழிக்குப் பழியாக, அமெரிக்காவுக்கு வரிகள் மூலம் கனடா பலமாக பதிலடி கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |