ட்ரம்பின் வரி போர்: எலான் மஸ்கின் டெஸ்லாவை குறிவைத்த கனடா!
Donald Trump
Elon Musk
Canada
Tesla
By Ragavan
கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் வரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், எலான் மஸ்கின் டெஸ்லா மீது பெரும் இடியை இறங்கியுள்ளது கனடா.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையேயான வரி போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டெஸ்லா (Tesla) நேரடி தாக்கத்தை எதிர்நோக்குகிறது.
கனடாவின் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் லிபரல் கட்சியின் தலைமை பதவி விரும்பி கிரிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதிகளுக்கு விதிக்க உள்ள 100% வரிக்கு பதிலடி தர, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
டெஸ்லா ஏன் இலக்காக உள்ளது?
- எலான் மஸ்க், டெஸ்லாவின் CEO, டிரம்பின் அரசாங்கத்திற்கு நிதி மற்றும் தொழில்துறை ஆதரவை வழங்கியுள்ளார்.
- டெஸ்லாவின் Model Y, Model 3 ஆகியன கனடாவில் அதிகம் விற்கப்படுகின்றன.
- Tesla கனடாவின் EV (மின்சார வாகன) சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, இதனால் டெஸ்லாவுக்கு பெரிய தாக்கம் ஏற்படும்.
கனடாவின் பதிலடி திட்டம்
- குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு 100% வரி விதிக்க கனடா திட்டமிட்டுள்ளது.
- டெஸ்லா விலைகளை உயர்த்தி, கனேடியர்கள் பிற EV நிறுவனங்களை தேர்வு செய்ய வழிவகை செய்யும் முயற்சியில் கனடா இறங்கியுள்ளது.
- "டிரம்பை ஆதரிக்கும் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும்" என்று ஃப்ரீலேண்ட் கண்டிக்கிறார்.
வரி போரின் விளைவுகள்
- அமெரிக்கா-கனடா உறவில் புதிய பரிணாமம்.
- EV சந்தையில் கனடா, டெஸ்லாவுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக மாறலாம்.
- ட்ரம்பின் வரி போரால் பல முன்னணி நிறுவனங்களை பாதிக்க வாய்ப்பு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada,Trump, Elon Musk's Tesla, US Canada tariff war
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US