டிரம்பின் வரிவிதிப்புகள் முட்டாள்தனமானவை! கனடா பிரதமர் ரூட்டோ பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வரிவிதிப்புகள் முட்டாள்தனமானவை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
கனடாவை சொந்தம் கொண்டாடும் டிரம்ப்
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றதை அடுத்து டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவித்து வருகிறார்.
இதற்கு கனடா கடுமையான கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கனடா மீதான வரிவிதிப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல மடங்கு அதிகரித்துள்ளார்.
‼️ The U.S. has declared war on Canada
— NEXTA (@nexta_tv) March 4, 2025
Though for now, it's only a trade war. pic.twitter.com/DKuR9X06a7
மேலும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவை அமெரிக்காவின் கவர்னர் ஜஸ்டின் ரூட்டோ என்றும் டொனால்ட் டிரம்ப் அழைத்து வருகிறார்.
ஜஸ்டின் ரூட்டோ பதிலடி
இதற்கிடையில் அமெரிக்காவின் 25% வரிவிதிப்பு முட்டாள் தனமானது என்றும், அமெரிக்கர்கள் அதற்கான விலையை அனுபவிப்பார்கள் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்துள்ளார்.
அதில், அமெரிக்கா அதன் நெருங்கிய கூட்டாளியும், நட்பு நாடுமான கனடா மீது வர்த்தகப் போர் ஒன்றை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் கனடா சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும், இது தொடர்பான விருப்பங்களை கனடா பரிசீலித்து வருவதாகவும் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரி விதிப்பு எத்தகைய தேவையும், நியாயமும் இல்லாதது என்றும், பெண்டானில் உற்பத்தி(fentanyl production) தொடர்பில் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்த டிரம்பின் புரிதலை இது குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |