வரிகளால் மிரட்டும் ட்ரம்ப்... அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா

Donald Trump Portugal Mark Carney
By Arbin Mar 16, 2025 03:14 AM GMT
Report

ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் மிரட்டி வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மறுபரிசீலனை செய்வதாக

குறித்த தகவலை கனேடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையால், இது உறுதி செய்யப்பட்ட முடிவென்றே கூறப்படுகிறது.

வரிகளால் மிரட்டும் ட்ரம்ப்... அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா | Trump Tariffs Canada Reviewing F 35 Purchase

அமெரிக்க F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்வதாக ஐரோப்பிய நாடான போர்த்துகல் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு கனடாவின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

மேலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வரிப் போர் மற்றும் அட்லாண்டிக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அவரது நடவடிக்கைகள் மீது சர்வதேச அளவில் கோபம் அதிகரித்து வரும் நிலையிலேயே போர்த்துகல் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

விளையாட்டு வேண்டாம்... புடினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரதமர் ஸ்டார்மர்

விளையாட்டு வேண்டாம்... புடினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரதமர் ஸ்டார்மர்

அனைத்து கனேடிய பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளை விதித்து அமெரிக்காவின் வடக்கு அண்டை நாடான கனடாவை ஜனாதிபதி ட்ரம்ப் தடுமாற வைத்தார். அத்துடன் கனடாவை 51வது அமெரிக்க மாகாணமாக மாற்ற பரிந்துரைப்பதன் மூலம் தொடர்ந்து கனேடியர்களை கோபப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கனடாவில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்கா உடனான F-35 ஒப்பந்தம், தற்போதுள்ள நிலையில், கனடாவிற்கு சிறந்த முதலீடா என்பதை தீர்மானிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரிகளால் மிரட்டும் ட்ரம்ப்... அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா | Trump Tariffs Canada Reviewing F 35 Purchase

உறுதி செய்ய வேண்டும்

மட்டுமின்றி, கனடாவின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யக்கூடிய வேறு வழிகள் இருந்தால் அதையும் பரிந்துரைக்கவும் அவர் கோரியுள்ளார். கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டினுடன் மொத்தம் 19 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான 88 F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கனேடிய அரசாங்கம் கையெழுத்திட்டது.

அத்துடன் 16 விமானங்களுக்கான தொகையை ஏற்கனவே கனேடிய நிர்வாகம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள கனேடிய நிர்வாகம், அமெரிக்கா உடனான இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை,

வரிகளால் மிரட்டும் ட்ரம்ப்... அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா | Trump Tariffs Canada Reviewing F 35 Purchase

ஆனால் மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு நாம் நமது முடிவுகளை முன்னெடுக்க வேண்டும், மேலும் ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவத்தில் கனேடியர்கள் மற்றும் கனேடிய ஆயுதப் படைகளின் நலன்களுக்காக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, போர்த்துகல் நிர்வாகமும், அமெரிக்க F-35 போர் விமானங்கள் மற்றும் ஐரோப்பிய விமானங்கள் இரண்டையும் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இதனால் கனடா மற்றும் போர்த்துகல் நிர்வாகங்கள் F-35 போர் விமானங்கள் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கடும் அழுத்தம் அளிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US