இந்தியா மீதான ட்ரம்பின் 50 சதவீத வரி அமுலுக்கு வந்தது
ட்ரம்ப் நிர்வாகத்தால் இந்தியா மீது திணிக்கப்பட்ட 50 சதவீத வரி புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், பல இந்தியப் பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை முதல் அமுல்
பரஸ்பர வரியாக இந்தியா மீது ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இரண்டாவதாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரி புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதனால், தற்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்கள் அனைத்திற்கும் 50 சதவீத வரி செலுத்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், காலணிகள், விளையாட்டுப் பொருட்கள், மற்றும் ரசாயனங்கள் போன்ற பொருட்கள் இதனால் 50 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் மருந்துகள் மற்றும் கணினி சில்லுகள் போன்ற தனித்தனியாக பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு வரி விலக்குகள் உள்ளன. ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள இந்த 50 சதவீத வரியால் இந்திய அரசாங்கத்திற்கு சுமார் 48.2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதிய வரிகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை வணிக ரீதியாக சாத்தியமற்றதாக்கி, வேலை இழப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் குறைக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |