ட்ரம்பால் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கும் கனேடிய மாகாணம் ஒன்று
கனேடிய மாகாணமான Prince Edward Island அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பால் சுமார் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கிறது.
மிகப்பெரிய தாக்கத்தை
கனேடிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையிலேயே Prince Edward Island முதல்வரான டென்னிஸ் கிங் நிதி இழப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் டென்னிஸ் கிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கான Prince Edward Island-ன் முக்கிய ஏற்றுமதியாக வேளாண் பொருட்கள், மீன்வளம், மருந்து, உயிரியல் மற்றும் விண்வெளித் தொழில்களில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது.
அமுலுக்கு வரும்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை Prince Edward Island அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அதாவது மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 25 சதவிகிதம் என்றே டென்னிஸ் கிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், P.E.I. மாகாணம் உற்பத்தி செய்யும் உருளைக்கிழங்கில் பாதிக்கும் மேற்பட்டவை, புதிய உருளைக்கிழங்காகவோ அல்லது உறைந்த பொருட்களாகவோ அமெரிக்காவிற்குச் செல்கின்றன.
ட்ரம்ப் வரி விதிப்பது அமுலுக்கு வரும் என்றால், உண்மையில் அது கடும் பின்னடைவாகவே இருக்கும் என டென்னிஸ் கிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |