ட்ரம்ப் வெற்றியால் சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள கவலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றத்துமே அவசர அவரசமாக சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூடி விவாதித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்திலும் ஒரு தரப்பினருக்கு ட்ரம்ப் வெற்றி கவலையை உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப் வெற்றியால் உருவாகியுள்ள கவலை
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், வரிகள் தொடர்பில் கூறியுள்ள விடயங்கள் சுவிஸ் ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளன.
சுவிட்சர்லாந்து, உலகிலேயே இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் போன்ற பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது அமெரிக்காவுக்குத்தான்.
இந்நிலையில், உறுதியான தகவல்கள் வெளியாகாவிட்டாலும், அமெரிக்கா தான் இறக்குமதி செய்யும் பொருட்களின் மீது 20 சதவிகிதம் வரை வரி விதிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் முதல் கட்டமாக 0.2 சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்றும், அதே நிலை தொடருமானால், ஒரு சதவிகிதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும், அமெரிக்காவுக்குப் போட்டியாக, ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் தங்கள் பங்குக்கு வரிகளை உயர்த்தலாம் என்பதால், மேலும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |