புலம்பெயர்வை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்தவும்., ஸ்டார்மருக்கு ட்ரம்ப் ஆலோசனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ பிரித்தானிய பயணத்தின் போது, பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் "குடியேற்ற நிலையை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்தவும்" என கூறியுள்ளார்.
"நாடுகளுக்குள் கட்டுப்பாடின்றி புலம்பெயர்தல் நடைபெறுமானால், அது அந்த நாடுகளை உள்ளிருந்து அழிக்கத் தொடங்கும்" என அவர் எச்சரித்தார்.
செக்கர்ஸ் மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நீங்கள் இராணுவத்தை அழைத்தாலும் சரி, எந்த வழியை தேர்தெடுக்கிறோம் என்பது பொருட்டே அல்ல, அது உள்ளிருந்து அழிவை ஏற்படுத்தும்" என கூறினார்.
அவரது பேச்சு நேர்மையானதும், கடுமையான எச்சரிக்கையுமாக இருந்தது.
இந்நிலையில், ஸ்டார்மர் தனது பதிவில், பிரான்சுடன் உள்ள One-IN One-Out என்ற குடியேற்ற ஒப்பந்தத்தை முன்னிலைப்படுத்தினார்.
ட்ரம்ப் தனது பயணத்தின்போது, விண்ட்ஸர் கோட்டையில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவால் வரவேற்கப்பட்டார்.
இந்த பயணம் இருநாடுகளும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும், குடியேற்ற கோள்களியில் ட்ரம்ப் எடுத்த அதிரடி நிலைப்பாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |