அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்கள்: ட்ரம்ப் என்ன நினைக்கிறார்?
கனடாவை மோசமாக நடத்திவரும் ட்ரம்புக்கு பதிலடி கொடுக்க, அமெரிக்க சுற்றுலா முதலான விடயங்களைத் தவிர்த்துவருகிறார்கள் கனேடியர்கள்.
அது குறித்து கனடாவுக்கான அமெரிக்க தூதரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ட்ரம்ப் என்ன நினைக்கிறார்?
கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பது குறித்து ட்ரம்ப் என்ன நினைக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த கனடாவுக்கான அமெரிக்க தூதர் பீற் (Pete Hoesktra), ட்ரம்பும் அவரது குழுவினர் சிலரும், கனேடியர்கள் இழிவாக நடந்துகொள்வதாகவும் அவர்களுடன் பழகுவது விரும்பத்தகாதது என்றும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா பிரீமியரான டேவிட் எபி, கனேடிய மக்கள் அமெரிக்காவை இன்னமும் அதிகமாக புறக்கணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவை நாம் புறக்கணிக்கும் முயற்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெளிவாகத் தெரிகின்றது என்று கூறியுள்ள டேவிட், ஆகவே, நான் என் சக கனேடியர்களிடம் கூறுவது என்னவென்றால், தொடர்ந்து கனேடிய தயாரிப்புகளை வாங்குங்கள்.
கனடாவுக்குள்ளேயே சுற்றுலா செல்லுங்கள். எங்கள் வேலைகள், எங்கள் பொருளாதாரம் மற்றும் எங்கள் இறையாண்மையைத் தாக்குவதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம், நாங்கள் உறுதியுடன் ஒன்றாக நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |