இந்தியாவிற்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்
சில அமெரிக்க பொருட்களின் இறக்குமதியில் அதிக வரி விதித்துள்ள இந்தியாவுக்கு அதே பாணியில் பதிலளிக்க இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
நாமும் வரி விதிப்போம்
அவர்கள் வரி விதித்தால், இனி நாமும் வரி விதிப்போம் என பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் பிரேசிலும் இருப்பதாக குறிப்பிட்ட டொனால்டு டிரம்ப், இந்தியா எங்களிடம் 100 சதவீதம் வரி வசூலித்தால், நாங்களும் இனி அவர்களுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்றார்.
ட்ரம்பின் இந்த முடிவுக்கு விளக்கமளித்துள்ள வர்த்தக செயலாளராக தெரிவாகியுள்ள ஹோவர்ட் லுட்னிக், நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்களோ அப்படித்தான் நீங்கள் நடத்தப்படுவீர்கள் என்று எதிர்பார்க்க வேண்டும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |