இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தும் டொனால்ட் டிரம்ப்
இந்தியாவின் புனேவில் டிரம்ப் உலக மையத்தை தனது ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் டொனால்ட் டிரம்ப் கட்ட உள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசியவாதி என்பதை தாண்டி, பெரும் தொழில் அதிபர் ஆவார்.
தனது தந்தையின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, The Trump Organization என்ற பெயருக்கு மாற்றிய டொனால்ட் டிரம்ப், அதன் கீழ் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அமெரிக்காவில் தனது தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்த டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியாவிற்கு விரிவுபடுத்தியுள்ளார்.
The Trump Organization மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், Trump world center என்ற பெயரில் வணிக ரியல் எஸ்டேட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புனேவில் டிரம்ப் உலக மையம்
289 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான விற்பனையை இலக்காகக் கொண்ட இந்த திட்டத்தை, புனேவை சேர்ந்த Kundan Spaces என்ற நிறுவனத்துடன் இனைந்து செயல்படுத்த உள்ளது.
1.6 மில்லியன் சதுரடியில் 27 தளங்களுடன் இரு வணிக கோபுரங்களாக(Commercial Towers) உருவாக்கப்பட உள்ளது. இதில் ஒரு கோபுரத்தில் சிறிய அலுவலகங்களுக்கும் மற்றொரு கோபுரத்தில் பெரிய அலுவலகங்களுக்கும் குத்தகைக்கு விடப்படும்.
இதில் உயர்நிலை சில்லறை விற்பனைக் கடை மற்றும் 40,000 சதுர அடி தனியார் கிளப் இடம் பெரும். இந்த திட்டம் 2029 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மொத்த முதலீடு ரூ.1,700 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த திட்டம் நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரின் மாதிரியைப் பின்பற்றி, அதிகரித்து வரும் உயர்நிலை மற்றும் சிறிய அளவிலான அலுவலக இடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்படும்.
அடுத்த 4 முதல் 6 வாரங்களில், மேலும் 3 அல்லது 4 டிரம்ப் பிராண்டட் சொகுசு குடியிருப்பு திட்டங்கள், வடக்கு மற்றும் தெற்கு இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது" என இந்தியாவில் டிரம்ப் அமைப்பின் சொத்து மேம்பாட்டு கூட்டாளியான Tribeca Developers-இன் நிறுவனர் கல்பேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |