பாலியல் வழக்கில் டிரம்ப்பிற்கு சிக்கல் - ரூ.748 கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்த டிரம்ப்பின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டிரம்ப் கரோல் வழக்கு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990 களின் காலகட்டத்தில், நியூயார்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இ. ஜீன் கரோல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், வழக்கு விசாரணைக்கு ஆஜராக மறுத்தார். அத்தோடு, இ. ஜீன் கரோலை சமூகவலைத்தளங்களில் விமர்சித்தார்.
டிரம்ப்பால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளான மற்ற பெண்களின் சாட்சியங்கள் மற்றும் பெண்கள் குறித்து டிரம்ப் தவறாக பேசுவது தொடர்பான டேப்பும் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிரம்ப்பிற்கு 85 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.748 கோடி) அபராதம் விதித்தது.
இந்த இழப்பீடு தொகை நியாயமற்ற முறையில் அதிகமாக இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட குழு, மாவட்டநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த ஒரு தவறும் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் உத்தரவிடப்பட்டு இழப்பீடு தொகைகள் நியாயமானவை" என தீர்ப்பளித்தனர்.
மேலும், அதிகாரப்பூர்வ செயல்களுக்கு ஜனாதிபதிக்கு விதிவிலக்கு அளிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இந்த வழக்கின் பொறுப்பிலிருந்து அவரைப் பாதுகாத்தது என்ற டிரம்பின் கருத்தையும் மேல்முறையீடு குழு நிராகரித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |