ஈரான் போர்: உதவ மறுத்த பிரான்ஸ்... மேக்ரானை மோசமாக கேலி செய்யும் ட்ரம்ப்
ஈரான் போரில் உதவ மறுத்ததால் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை மோசமாக விமர்சித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
மேக்ரானை மோசமாக விமர்சித்துள்ள ட்ரம்ப்
எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆழம் தெரியாமல் ஈரான் போரில் காலை விட்டு விட்டு விழி பிதுங்கி நிற்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

உலக தலைவர்கள் ஒவ்வொருவரிடமுமாக அவர் உதவி கோர, இது எங்கள் போர் அல்ல என அவர்கள் கைகழுவிவிட, கோபத்தில் என்ன பேசுவது என தெரியாமல் வார்த்தைகளை விட்டுவருகிறார் ட்ரம்ப்.
நேற்று மதியம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஈரான் போரில் கொஞ்சம் உதவி தேவைப்படுகிறது என்றும், கொஞ்சம் உதவி தேவை என்றும், உடனடியாக கப்பல்களை அனுப்புமாறும் தான் மேக்ரானிடம் கேட்டதாக தெரிவித்தார்.
ஆனால் மேக்ரானோ, இல்லை, இல்லை டொனால்ட், எங்களால் உதவ முடியாது, போர் முடிந்தபிறகு உதவுகிறோம் என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

போர் முடிந்தபிறகு எங்களுக்கு உதவி தேவை இல்லை இமானுவல், என தான் கூறியதாக தெரிவித்த ட்ரம்ப், ஒரு விடயம் புரிகிறது, நமக்கு பிரச்சினை என்றால் நேட்டோ நமக்கு உதவி செய்யாது என்பது புரிகிறது என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
விடயம் என்னவென்றால், அரசியல் நாகரீகத்துடன், பிரான்சிடம் உதவி கோரினோம், அவர்கள் உதவவில்லை என்று கூறவில்லை ட்ரம்ப்.
தேவையில்லாமல், மேக்ரானின் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக கேலி செய்தார் அவர்.

நான் மேக்ரானை அழைத்தேன், மனைவியால் மோசமாக நடத்தப்படுகிறாரே, அதே மேக்ரான்தான், பாவம் அவர், அவரது தாடை இன்னமும் முழுமையாக சரியாகவில்லை என்று கூறிய ட்ரம்ப், நமக்கு உதவி தேவையில்லை, என்றாலும், சும்மா மேக்ரானிடம் கேட்டுப் பார்த்தேன் என்றும் கூறியுள்ளார்.
அதாவது, 2025ஆம் ஆண்டு மே மாதம், மேக்ரானின் மனைவியாகிய பிரிஜிட் மேக்ரான், தன் கணவரை கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி இணையத்தில் வெளியாக, இருவருக்கும் சண்டை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
அதைக் குறிப்பிடும் வகையில்தான், பாவம் அவர், மேக்ரானின் தாடை இன்னமும் முழுமையாக சரியாகவில்லை என கேலியாக கூறியுள்ளார் ட்ரம்ப்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |