ட்ரம்ப்பின் நம்பிக்கையை பெற்ற இந்திய வம்சாவளி.., நிர்வாகத்தில் முக்கிய இடம்?
அமெரிக்க அதிர்பர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதிகம் பேசப்பட்ட இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, ட்ரம்ப்பின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
யார் இவர்?
குடியரசு கட்சியின் முக்கிய நபராகவும், வளர்ந்து வரும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் விவேக் ராமசாமி (Vivek Ramaswamy).
அமெரிக்க தேர்தல் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான வேலைகளை திறம்பட செய்தவர் விவேக் ராமசாமி.
அதுமட்டுமல்லாமல், தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன், " He is an American Badass" என்று புகழாரம் சூட்டினார். மேலும், "ட்ரம்பை தகுதிநீக்கம் செய்யவும், சிறையில் அடைக்கவும், கொல்லவும் முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. அமெரிக்கர்களை குறைவாக மதிப்பிட்டுள்ளனர் என்றார்.
முக்கியமாக விவேக் ராமசாமியின் தடையற்ற சந்தை முதலாளித்துவத்தை ஆதரிப்பதும் கார்பரேட் விழிப்புணர்ச்சி பற்றிய பேச்சுக்களும் அவரை ட்ரம்பின் கட்சியில் முக்கிய நபராக மாற்றியது.
மேலும், ட்ரம்பின் பிரச்சாரங்களில் ஈடுபட்டு தொழில் வளர்ச்சி மற்றும் இடதுசாரி தன்மைகளுக்கு எதிராக இவர் பேசியது மக்களிடம் சென்றடைந்தது.
குறிப்பாக விவேக் ராமசாமி பேசுகையில், " Trump's comeback, America's comeback" மற்றும் "நம் நாட்டுக்கு ஒரு Badass Commander-in-Chief தேவை" என்றார்.
இவரது பணிகள் மூலம் தற்போது விவேக் ராமசாமி, ட்ரம்ப்பின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
பிரச்சார கூட்டம் ஒன்றில் விவேக் ராமசாமி குறித்து பேசிய ட்ரம்ப், "He is Smart as Hell". நம்முடைய நிர்வாகத்தில் இவர் இடம்பெறுவர் என்று நம்புகிறேன். நமது அரசின் துறையில் வேறு யாரையும் நாம் நியமனம் செய்தாலும் அவர்களை விட சிறப்பாக செயல்படுவார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |