சீன எதிர்ப்பை மறைமுகமாக பிரித்தானியா மீது திணிக்கும் ட்ரம்ப்
பிரித்தானிய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்னும் பெயரில், சீன எதிர்ப்பை மறைமுகமாக பிரித்தானியா மீது காட்டுகிறார் ட்ரம்ப்.
சீன எதிர்ப்பை மறைமுகமாக காட்டும் ட்ரம்ப்
ஆம், பிரித்தானியா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகளில், சீன உட்பொருட்கள் எதுவும் இருக்கக்கூடாது என ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா தனது மருந்துகள் தயாரிப்புக்காக சீன நிறுவனங்களைத்தான் பெருமளவில் நம்பியுள்ளது.
சொல்லப்போனால், உலக மருந்துகள் தயாரிப்புக்கான உட்பொருட்களில் 80 சதவிகிதம் சீனாவிலிருந்துதான் பெறப்படுகின்றன.
ஆக, சீன எதிர்ப்பை பிரித்தானியா மீது கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் ட்ரம்ப்.
என்றாலும், பிரித்தானியாவுக்கான மருந்துகள் தயாரிப்பில் சீன உட்பொருட்கள் இருப்பது குறித்து தனக்குக் கவலை இல்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுக்கு பிரித்தானியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் சீன உட்பொருட்கள் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளாராம்.
விடயம் என்னவென்றால், இப்போதைக்கு மருந்துகள் விடயத்தில் கட்டுப்பாடுகள் விதித்துள்ள ட்ரம்ப், போகப்போக, பிரித்தானியா சீனாவுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ள அழுத்தம் கொடுக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதாக The Sun பத்திரிகை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |