ட்ரம்பின் பிடிவாதம்... 14 மில்லியன் இறப்புகள் உறுதி: எச்சரிக்கும் அறிக்கை
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமைக்கான ஜனாதிபதி ட்ரம்பின் நிதி குறைப்புகளால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 14 மில்லியன் மக்கள் இறக்க நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்படும் அதிர்ச்சி
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு (4.5 மில்லியன்) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதன் விளைவாக ஏற்படும் அதிர்ச்சி, பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதலுக்கு ஒப்பிடத்தக்கதாக இருக்கும் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிடத்தக்க வகையில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு 133 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தரவுகளைச் சேகரித்து, 2001 மற்றும் 2021 க்கு இடையில் USAID நிதியுதவி வளரும் நாடுகளில் 91.8 மில்லியன் இறப்புகளைத் தடுத்ததாக மதிப்பிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது இரண்டாம் உலகப் போரின் கணிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும். ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரும் வரை, உலகளாவிய மனிதாபிமான நிதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமானதை USAID வழங்கியுள்ளது.
தவறாக வழிநடத்தப்படுவதாக
ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியும் ஆலோசகருமான எலோன் மஸ்க், அந்த நிறுவனத்தை தவறாக வழிநடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் USAID மூடப்பட்டதை விமர்சித்துள்ளனர். மட்டுமின்றி, அந்த நிறுவனத்தை கலைத்தது ஒரு மிகப்பெரிய தவறு என்றும் ஒபாமா கூறினார்.
USAID-ஐ அகற்றுவது ஒரு கேலிக்கூத்து, அது ஒரு துயரம். ஏனென்றால் அந்த முகமையால் உலகில் பல்வேறு நாடுகளில் மிக முக்கியமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஒபாமா கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |