உலகப்புகழ் பெற்ற கனேடிய பாடகியின் பாடலை அனுமதியின்றி பயன்படுத்திய ட்ரம்ப்: அந்த பாடலா?
உலகப்புகழ் பெற்ற கனேடிய பாடகி ஒருவரின் பாடல் ஒன்றை தனது பிரச்சாரத்தில் அனுமதியின்ற் பயன்படுத்தியுள்ளார் ட்ரம்ப்.
கனேடிய பாடகியின் பாடலை அனுமதியின்றி பயன்படுத்திய ட்ரம்ப்
பிரபல கனேடிய பாடகியான செலின் டயான், டைட்டானிக் திரைப்படத்துக்காக பாடிய, ’My Heart Will Go On’ என்னும் பாடல், ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரச்சார மேடையில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரை ஒன்றில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
Meanwhile on the Trump campaign they are literally playing the theme song of a movie about a sinking ship before a rally.
— David Hogg ? (@davidhogg111) August 10, 2024
pic.twitter.com/IMIuiz7uXb
அனுமதியின்றி செலின் டயானின் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், இதுபோல் தன் பாடலை அனுமதியின்றி பயன்படுத்துவதை அவர் ஆதரிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தப் பாடலா?
இதற்கிடையில், அந்தப் பாடலையா தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவார்கள்? என சமூக ஊடகங்களில் மக்கள் கேலி செய்துவருகிறார்கள்.
கடலில் மூழ்கிய ஒரு கப்பலைக் குறித்த திரைப்படப் பாடலை, தேர்தலுக்கு முன் தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளார்கள் ட்ரம்ப் பிரச்சாரக்குழுவினர் என சமூக ஊடகமான எக்ஸில் கேலியாக விமர்சித்துள்ளார் ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |