ட்ரம்பின் வெற்றி... ஒரே நாளில் பெரும் கோடீஸ்வரர்கள் பெற்றுக்கொண்ட ஆதாயம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பும் சாதனை உயர்வை எட்டியுள்ளது.
பெரும் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் உலகின் முதன்மையான பெரும் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு சாதனை உயர்வை சந்தித்துள்ளது.
ஒரே நாளில் இந்த டாப் 10 கோடீஸ்வரர்கள் 64 பில்லியன் டொலர் ஆதாயம் பெற்றுள்ளனர். 2012க்கு பின்னர் ஒரே நாளில் பல பில்லியன் தொகை ஆதாயம் பெறுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
இதில் எலோன் மஸ்க் மட்டும் புதன்கிழமை ஒரே நாளில் 26.5 பில்லியன் டொலர் ஆதாயமடைந்துள்ளார். உலகின் பெரும் கோடீஸ்வரரான அவரது சொத்து மதிப்பு தற்போது 290 பில்லியன் டொலர் என பதிவாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்பின் பெரும் ஆதரவாளராக மாறிய எலோன் மஸ்க், போட்டி மிகுந்த 7 மாகாணங்களில் தீவிர பரப்புரைகளும் மேற்கொண்டிருந்தார். அவரது டெஸ்லா நிறுவன பங்குகள் விலை பெருமளவு உயர்ந்துள்ளது.
அமெரிக்க பங்குகளில் பெரும் எழுச்சி
எலோன் மஸ்க் மட்டுமின்றி, அமேசானின் ஜெஃப் பெசோஸ், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், ஆப்பிளின் டிம் குக் ஆகியோரின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்கள் குறைந்த வரி மற்றும் ஒழுங்குபடுத்தும் கொள்கையை எதிர்பார்த்ததால், புதன்கிழமை அமெரிக்க பங்குகளில் பெரும் எழுச்சி காணப்பட்டது. புதன்கிழமை மட்டும் 7 பில்லியன் டொலர் ஆதாயமடைந்துள்ளார் ஜெஃப் பெசோஸ்.
மேலும் குடியரசுக் கட்சியின் பரம்பரை ஆதரவாளரான லாரி எலிசன், மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின் தலைவர் சுமார் 10 பில்லியன் டொலர் அளவுக்கு ஆதாயமடைந்துள்ளார்.
குறித்த பட்டியலில் ஒரே ஒரு நபர் மட்டும், பிரெஞ்சு ஆடம்பரப் பொருட்களின் விற்பனையாளரான பெர்னார்ட் அர்னால்ட் 3 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமை சுமார் 81 மில்லியன் டொலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |