செப்டம்பரில் பிரித்தானியா செல்லும் ட்ரம்ப்; மன்னர் சார்ல்ஸுடன் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரும் செப்டம்பரில் பிரித்தானியா செல்ல திட்டமிட்டுள்ளார்.
அப்போது பிரித்தானிய மன்னர் சார்ல்ஸை சந்தித்து Windsor Castle-ல் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நபருக்கு இருமுறை ராஜதந்திரப் பூர்வ வரவேற்பு வழங்கப்படுவைது இதுவே முதல் முறையாகும்.
ஏனெனில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கின்ற காரணத்தால் இது சாத்தியமாகிறது.
ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு பேசிய ட்ரம்ப், “இது ஒரு பெருமை. மன்னர் சார்ல்ஸுடன் நட்பு வைத்திருப்பது எனக்கு ஒரு மரியாதை. பிரித்தானியா ஒரு சிறந்த நாடு,” என்று தெரிவித்தார்.
இந்த பயணம் ட்ரம்பின் இரண்டாவது அரசியல் வரவேற்புக்கான முன்பதிவாகும். முன்னதாக 2018-ல் ட்ரம்ப், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அழைப்பில் முதல் வருகையை தந்தார்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், எதிர்வரும் அரசு வரவேற்புக்கான ஏற்பாடுகள் மற்றும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது ஆகும்.
பிரித்தானிய-அமெரிக்க உறவுகள் தற்போது சில சிக்கல்களை எதிர்கொள்கின்றன. ட்ரம்ப் ஆரம்பித்த வர்த்தக போர் காரணமாக, பிரித்தானியா மீது 10 சதவீத வரி விதிக்கப்படுமா என ஜூனில் அறிவிக்கப்படும்.
மேலும், உக்ரைனில் அமைதிக்கான முயற்சிகளில் ட்ரம்ப் பழைய பைடன் அரசுடன் ஒப்பிடும் போது குறைவான ஆதரவை வழங்குவது குறித்தும் கவலை உள்ளது.
இந்நிலையில், இந்த செப்டம்பர் பயணம் இருநாட்டு உறவுகளை சீரமைக்க ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |