ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரி விதிப்பு உறுதி: டொனால்டு ட்ரம்ப் அடுத்த அதிரடி
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் வரிகளை விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகித வரி விதிப்பது குறித்து தனது நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் ஃபெண்டானில் சீனாவிலிருந்து மெக்சிகோ மற்றும் கனடாவிற்கு அனுப்பப்படுகிறது என அவர் பதிலளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தனது முதல் பதவிக் காலத்தில் சீனா மீது ஏற்கனவே பெரிய அளவிலான வரிகளை விதித்ததாகக் கூறினார்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளும் அமெரிக்காவுடன் சிக்கலான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மிக மிக மோசமாக அமெரிக்காவிடம் செயல்படுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
BRICS கூட்டணி
இதனாலையே வரி விதிக்கும் கட்டாயத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தள்ளப்படுகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் BRICS கூட்டணி மீது 100 சதவிகித வரி உறுதி என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தக் குழுவால் அமெரிக்கா அச்சுறுத்தப்படுவதாக அவர் உணருவதற்குக் காரணம், அது அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுதமான டொலரைப் பலவீனமாக்குகிறது என்றே அவர் நம்புகிறார்.
மட்டுமின்றி, இந்த கூட்டமைப்பானது டொலருக்கு மாற்றாக புதிய நாணயம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
இவர்களுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் இந்தோனேசியா. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |