இது மூன்றாம் உலகப்போரில்தான் முடியும்: ட்ரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் போர் துவங்கி சுமார் 4 ஆண்டுகள் முடிவடைய உள்ளன. ஆனாலும், இன்னமும் போருக்கு ஒரு முடிவு எட்டப்பட்டாற்போல் தெரியவில்லை.
இந்நிலையில், இதே நிலை தொடருமானால், ரஷ்ய உக்ரைன் போர் உலகப்போராகத்தான் முடியும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
இது மூன்றாம் உலகப்போரில்தான் முடியும்
ரஷ்ய உக்ரைன் போரில் சென்ற மாதத்தில் மட்டும் சுமார் 25,000 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், இதே நிலை தொடருமானால், ரஷ்ய உக்ரைன் போர் உலகப்போராகத்தான் முடியும் என்று எச்சரித்துள்ளார்.

அத்துடன், மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படுவதைப் பார்க்க தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் போரை நிறுத்த, தான் மிகக் கடுமையாக முயற்சி செய்துவருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |