இறக்குமதி வரியை குறைத்த சீனா: பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
சீனாவுடனான வர்த்தகம் பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரின் சீன சுற்றுப்பயணம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நான்கு நாள் அரசுமுறை பயணமாக சீனாவுக்கு சென்று நாடு திரும்பியுள்ளார்.
இந்த 4 நாள் சுற்றுப்பயணத்தில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சீன தலைநகர் பெய்ஜிங் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிரித்தானிய பிரதமர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இதுவே முதல் முறையாகும்.
பிரித்தானியா - சீனா உறவில் முன்னேற்றம்
இந்த சுற்றுப்பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கிட்டத்தட்ட 1 மணி நேரம் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவின் முக்கிய ஏற்றுமதி பொருளான விஸ்கி மீதான இறக்குமதியை வரியை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக சீனா குறைத்துள்ளது.
இதன் மூலம் பிரித்தானியாவுக்கு ஆண்டுக்கு சுமார் 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் எச்சரிக்கை
டிரம்பின் புதிய வரி கொள்கைக்கு பிறகு பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சீனாவுடன் வர்த்தகம் செய்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |