கனடா காணாமல் போய்விடும்: ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
அமெரிக்கா கனடாவிடம் பொருட்கள் வாங்கவில்லையென்றால், கனடா என்று ஒரு நாடே இருக்காது என மீண்டும் எச்சரித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
கனடா காணாமல் போய்விடும்...
கனடாவுக்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்து, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக மிரட்டி வந்தார் ட்ரம்ப்.
கனடா மக்களோ, அமெரிக்கப் பொருட்களையே புறக்கணித்துவிடுவோம் என பதிலடி கொடுத்துள்ளார்கள்.
அத்துடன், இனி அமெரிக்காவுக்கு சுற்றுலாவும் வரமாட்டோம் என கனேடியர்கள் பலர் கூறிவருகிறார்கள்.
இருந்தும் தனது நிலைப்பாட்டிலிருந்து சற்றும் மாறாத ட்ரம்ப், எங்களுக்கு கனடாவின் கார்கள் வேண்டாம். நாங்களே எங்களுக்கான கார்களை தயாரித்துக்கொள்கிறோம்.
ஆனால், அமெரிக்கா கனேடிய தயாரிப்புகளை வாங்கவில்லையென்றால், கனடா என்றொரு நாடே இருக்காது என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |