ரஷ்ய விவகாரத்தில் மீண்டும் அதிக வரி குறித்து இந்தியாவை எச்சரித்த ட்ரம்ப்
ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்காவிட்டால், அந்த நாட்டின் மீது அதிக வரிகளை விதிக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிக வரி விதிப்பதைத் தவிர
மோடி ஒரு நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் அறிந்திருப்பார், மேலும் தன்னை மகிழ்ச்சியடையச் செய்வது முக்கியம் என்பதையும் அவர் உணர்ந்திருப்பார் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், அவர்கள் மீது அதிக வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார். ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் தண்டனையாக, அமெரிக்கா கடந்த ஆண்டு இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியது.
கடுமையான வரிகள் விதிக்கப்பட்டபோதிலும், நவம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்தது. இருப்பினும், இந்திய அதிகாரிகள், அமெரிக்காவின் வர்த்தகக் கோரிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
வர்த்தக ஒப்பந்தம்
ஆனால், வெளியான தரவுகளின் அடிப்படையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் எண்ணெயின் அளவு குறைந்துள்ளது. இதனிடையே, ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் எண்ணெய் குறித்த வாராந்திர விவரங்களை வழங்குமாறு இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயல்வதால், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்க்கும் கீழே குறையும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ட்ரம்பின் வரி விதிப்பிற்கு பிறகு இந்தியாவின் மோடி மூன்று முறை ட்ரம்புடன் தொலைபேசியில் விவாதித்துள்ளார். ஆனால், விவாதங்கள் எந்த முடிவும் எட்டப்படாமல் நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |