அமெரிக்கா சீரழியப் போகிறது... அவர் ஒரு இடதுசாரி: கமலா ஹாரிஸ் தொடர்பில் எச்சரித்த ட்ரம்ப்
திங்களன்று இரவு எலோன் மஸ்க் உடனான நேரலையில் கமலா ஹாரிஸ் தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தீவிர இடதுசாரி பைத்தியம்
கமலா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்கா சீரழியும் என்றே எலோன் மஸ்க் உடனான நேரலையின் போது டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எலோன் மஸ்க் முன்னெடுத்த நேரலையில் தொடக்கம் முதலே டொனால்டு ட்ரம்ப் தமது அரசியல் எதிரியான கமலா ஹாரிஸை விமர்சனம் செய்யத் தொடங்கினார்.
கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால், நாம் உயிர் பிழைப்பதே கடினம் என்றார். மட்டுமின்றி, கமலா ஹாரிஸ் ஒரு தீவிர இடதுசாரி பைத்தியம் எனவும், அவர் பெர்னி சாண்டர்ஸை விட மிகவும் மோசமானவர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானால், நாடு சீரழிவது உறுதி என்றார். ஹாரிஸ் ஒன்றும் புத்திசாலி இல்லை, அவர் இப்படியான உரையாடலை எதிர்கொள்ள வாய்ப்பில்லை.
ட்ரம்ப் எப்போதுமே ஆபத்தானவர்
அமெரிக்க எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது, ஆனால் தற்போதைய நிலை என்னவென்றால், சீரழிந்து கிடக்கிறது என்றார். உண்மை என்னவென்றால், அவர் அமெரிக்க ஜனாதிபதியானால், நாடு மிகப்பெரிய வெளியேற்றத்தை எதிர்கொள்ளும் என டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் ட்ரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள கமலா ஹாரிஸ் தரப்பு, ட்ரம்ப் எப்போதுமே ஆபத்தானவர், அவரது கொள்கைகள் அமெரிக்க மக்களுக்கு உகந்ததல்ல. டொனால்டு ட்ரம்பின் மொத்த பரப்புரையும் எலோன் மஸ்க் போன்ற நபர்களுக்கானது, அவர் தனது நிலை குறித்து மட்டுமே சிந்திக்கக் கூடிய கோடீஸ்வரன் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |