பைபிள் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த ட்ரம்ப்.., ஒரு பைபிளின் விலை எவ்வளவு?
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளது.
பைபிள் விற்பனை
அமெரிக்காவின் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் டொனால்ட் ட்ரம்பின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரியல் எஸ்டேட் முதல் கிரிப்டோகரன்ஸி வரை டொனால்ட் ட்ரம்ப் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, அவரிடம் இருக்கும் கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு 10 லட்சம் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.8.4 கோடி) ஆகும்.
மேலும், பைபிள் விற்று 3 லட்சம் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி) வருமானம் ஈட்டியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களின் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் 'God bless the USA' என பெயரிடப்பட்டுள்ள பைபிளை விற்பனை செய்து வருகிறார். ஒரு பைபிளின் விலை 60 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5,000) ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |