இன்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் ட்ரம்ப்: முதல் வேலையே புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இன்று பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், அவர் பதவியேற்றதுமே உடனடியாக புலம்பெயர்தல் தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன நடவடிக்கைகள்?
தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் நிறைவேற்ற இருப்பதாக ஒரு வாக்குறுதி பட்டியலே அளித்துள்ளார் ட்ரம்ப்.
அவற்றில் இரண்டு புலம்பெயர்தல் தொடர்பிலானவை.
ட்ரம்பின் முதல் வாக்குறுதியே, அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் புலம்பெயர்ந்தோர் அனைவரையும் நாடுகடத்துவதாக உறுதியளித்துள்ளதுதான்.
அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, எல்லைகளை மூடப்போவதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
அடுத்ததாக, அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் தானாகவே அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் birthright citizenship என்னும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு புலம்பெயர்வோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் பிள்ளைகள், அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கு பயன்படுத்தும் வழிமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |