ஒன்றாக கைகோர்த்து ட்ரம்புக்கு அழுத்தம் கொடுக்கலாம்: ஜேர்மன் அமைச்சர்
ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ட்ரம்புக்கு அழுத்தம் கொடுக்கலாம் என ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்தால்...
ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்னும் யோசனையில் அவரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பல ஆழ்ந்துள்ளன.
இந்நிலையில், ஜேர்மனியும், ஐரோப்பாவும், கூட்டணி நாடுகளும் இணைந்து ட்ரம்புக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான ராபர்ட் (Robert Habeck).
நாம் கொடுக்கும் அழுத்தத்தில், ட்ரம்ப் தனது அறிவிப்புகளை மாற்றிக்கொள்ளும் வகையில் அவருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ராபர்ட்.
அப்புறம் பார்க்கலாம் இந்த பலப்பரீட்சையில் யார் பலசாலி என்பதை, என்றும் கூறியுள்ள ராபர்ட், ட்ரம்பை வலியுறுத்துவதோ, தாஜா செய்வதோ அவரை மாற்றாது என்றும், ட்ரம்பும் அழுத்தத்தை அனுபவித்தால்தான் அவர் பணிவார் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |