Golden Visa கேட்டு கூட்டமாக வெளியேற முடிவு செய்த அமெரிக்க மக்கள்... காரணம் ஒருவர்
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில் Golden Visa தொடர்பில் விசாரிக்கும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணிக்கை 400 மடங்கு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் பொறுப்புக்கு வரவிருக்கிறார். இந்த நிலையில் Henley & Partners என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் புதிய தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் தேர்தல் நடந்த வாரத்தில் மட்டும் Golden Visa தொடர்பில் விசாரித்த அமெரிக்க மக்களின் எண்ணிக்கை 400 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மிகவும் குறைவான எண்ணிக்கையிலான மக்களே நாட்டைவிட்டு வெளியேறும் திட்டத்துடன் இருப்பதாகவும், பெரும்பாலானோர் இக்கட்டான சூழலில் வெளியேறும் பொருட்டு Golden Visa தொடர்பில் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Golden Visa தொடர்பில் விசாரிக்கும் பெரும்பாலானோரின் இலக்கு ஐரோப்பிய நாடுகளாக இருந்துள்ளது. இந்த நிலையிலேயே போர்த்துகல் நிர்வாகத்தின் Golden Visa திட்டம் கவனம் பெற்றது.
குறைந்தபட்சம் 250,000 யூரோ முதலீடு செய்பவர்களுக்கு போர்த்துகல் நிர்வாகம் Golden Visa வாய்ப்பினை வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் குடியுரிமை பெறுவதற்கான எளிதான வழியாகவும் இதனைக் குறிப்பிடுகின்றனர்.
உடனடி குடியுரிமை
Golden Visa பெறுவோருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் குடியுரிமை கோரும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும் கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் மால்டா மற்றும் ஆஸ்திரியா நாடுகளையே குறிவைத்துள்ளனர்.
கட்டுமான நிறுவனங்களில் முதலீடு மற்றும் தொண்டு நிறுவனங்களில் நன்கொடைகளுடன் திரும்பப்பெறாத 600,000 யூரோ கட்டணமாக செலுத்தினால் மால்டா நிர்வாகம் உடனடி குடியுரிமையை வழங்குகிறது.
ஆனால், உள்ளூர் தொழில் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் 3.5 மில்லியன் யூரோ முதலீடு செய்தால் குடியுரிமை வழங்குவதாக ஆஸ்திரியா அறிவித்துள்ளது.
பொதுவாக அரசியல் நெருக்கடி மிகுந்த நாடுகளில் இருந்தே செல்வந்தர்கள் Golden Visa திட்டத்தை விரும்புவார்கள். ஆனால் கோவிட் காலகட்டத்தில் அமெரிக்க செல்வந்தர்கள் Golden Visa கேட்டு பல நாடுகளை நாடத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |