ட்ரம்ப் வெற்றி பெற்றால்... கோவிட் தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றால், கோவிட் தொடர்பான உளவுத்துறை ஆவணங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என உயர்மட்ட வைராலஜிஸ்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கசிந்திருக்க வேண்டும்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அனைத்து மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் Dixville Notch என்னும் நகரில் தேர்தல் நடைபெற்று முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் வெளியாகிவிட்டது.
வெறும் 6 வாக்காளர்கள் மட்டுமே கொண்ட இந்த நகரில், மூவர் ட்ரம்புக்கும் எஞ்சிய மூவர் ஹரிஸுக்கும் வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில், சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கோவிட் தொற்று கசிந்திருக்க வேண்டும் என நம்பிவரும் 73 வயதான டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் உயர்மட்ட வைராலஜிஸ்ட் என அறியப்படும் இவர் டொனால்டு ட்ரம்பின் வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். கோவிட் தொற்றால் உலகில் முதல் நபர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சுமார் 5 ஆண்டுகள் கடந்த நிலையில்,
[]
உலகம் மொத்தம் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள இந்த விடயத்தில், இந்த பெருந்தொற்று எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான உறுதியான பதில் இதுவரை உலகிற்கு தெரியவரவில்லை.
ட்ரம்ப் ரகசியங்களை வெளியிடுவார்
அமெரிக்க மக்கள் இன்று வாக்களித்து வரும் நிலையில், 2020ல் பெருந்தொற்றின் தொடக்க நாட்களில் CDC அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், கோவிட் தொடர்பில் மறைக்கப்பட்ட மொத்த ரகசியங்களும் வெளிவர வேண்டும் என்றால் டொனால்டு ட்ரம்ப் மீண்டு ஜனாதிபதியாக வேண்டும் என நம்புகிறார்.
ஜனாதிபதி ட்ரம்ப் உளவு ரகசியங்களை வெளியிடுவார் என நம்பும் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், சீனாவின் ஒத்துழைப்புடன் முழுமையான விசாரணைக்கும் ட்ரம்பால் அழுத்தமளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
2020ல் கோவிட் தொடர்பில் ட்ரம்புடன் இணைந்து செயல்பட்டவர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட். கோவிட் தொடர்பான விசாரணையில் அமெரிக்க குழு ஒன்றையும் அனுமதிக்க வேண்டும் என சீனா நிர்வாகத்தை கெஞ்சியிருந்தார்.
ஆனால் சீனா விடாப்பிடியாக மறுத்துள்ளதுடன், கோவிட் தொடர்பான மேலதிக விசாரணையில் அமெரிக்காவுக்க் கடும் பின்னடைவும் ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |