ஜேர்மனியில் இருந்து வெளியேறும் 5000 அமெரிக்க வீரர்கள்: டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு
ஜேர்மனியில் இருந்து 5000 இராணுவ துருப்புகளை திரும்ப பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப்படும் துருப்புகள்
ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள உறவு விரிசலை தொடர்ந்து, ஜேர்மனியில் இருந்து 5000 வீரர்களை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் பலத்தை குறைக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈரான் விவகாரத்தில் ஜேர்மனியிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தை ஜேர்மனி கையாண்ட விதமும் அமெரிக்கா-ஜேர்மனி இடையே உறவு விரிசலை ஏற்படுத்தி இருந்தது.
ஜேர்மனியில் இருந்து திரும்பும் இராணுவ வீரர்களின் ஒரு பகுதி அமெரிக்காவிற்கு திரும்புவார்கள் என்றும், மற்ற வீரர்கள் பிற முக்கியமான மூலோபாய இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியை தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், சமீபத்தில் ஜேர்மனி, ஸ்பெயின், மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்படலாம் என்று டிரம்ப் சூசகமாக எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |