புதிய அவப்பெயர் யுகம்... ஜெலென்ஸ்கி - ட்ரம்ப் மோதல் குறித்து ஜேர்மன் அமைச்சர்
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் ஜனாதிபதியை கொதிப்படைய செய்ய வைத்த செயல் ஒரு கெட்ட கனவு என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கெட்ட கனவு அல்ல
நேற்று மாலை ஒரு புதிய அவப்பெயர் யுகம் தொடங்கியிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Annalena Baerbock அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் காணொளிகளைப் பார்த்த பிறகு உங்களில் பலர் நிம்மதியாகத் தூங்கியிருப்பீர்கள், உண்மையில் நான் நன்றாகவே தூங்கினேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக இது ஒரு கெட்ட கனவு அல்ல, ஆனால் ஒரு கனமான உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலென்ஸ்கி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவளிக்க ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் பட்ஜெட் விதிகளை தளர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உதவிகள் வழங்க முடியும்
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்தில் அதிக நெகிழ்வுத்தன்மைக்கு முழு மனதுடன் அழுத்தம் கொடுப்பதாக அவர் கூறினார். இதனால் உக்ரைனுக்கு அதிக உதவிகள் வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவை வாபஸ் பெற்றாலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை உக்ரைன் தாங்கிக்கொள்ள இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் என்று Annalena Baerbock தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |