டிரம்ப் உருவாக்கிய காசா அமைதி குழு: புறக்கணித்தது இந்தியா!
காசா போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைத்த அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
டிரம்பின் அமைதி வாரியம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன இடையிலான போர் நடவடிக்கையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர அமைதி வாரியம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
காசாவில் நிரந்தரமான போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதே இந்த அமைதி வாரியத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இந்த குழு காசாவில் நிர்வாக விவகாரங்களையும் இந்த குழு மேற்பார்வையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா புறக்கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவாக்கியுள்ள இந்த அமைதி வாரியத்தில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, துருக்கி, ஜோர்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
மேலும் இந்த குழுவில் இணைவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி அமைத்த அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |