டிரம்ப் வெற்றியால் கனேடிய டொலரின் மதிப்பு குறைய வாய்ப்பு
அமெரிக்காவில் டிரம்பின் வெற்றி கனடாவின் வட்டி விகிதத்திலும், கனேடிய டொலரிலும் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் வட்டி விகித கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு, அதன் தாக்கம் கனேடிய வட்டி விகிதத்தில் மற்றும் கனேடிய டொலரின் மதிப்பில் பிரதிபலிக்கக் கூடும்.
டிரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், குறைந்த வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறையை எளிமைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இது பொருளாதாரத்தில் குறைந்த பட்சமாக 3% வரை பணவீக்கத்தை உயர்த்தக்கூடும் என்று Goldman Sachs பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது அமெரிக்காவின் Federal Reserve interest rate-களை குறைக்கும் செயல்முறையை மந்தமாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் உயர்ந்த பணவீக்க நிலை, Bank of Canada-க்கும் கவலைக்குரியதாக உள்ளது.
கனடா அதன் வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது அமெரிக்காவின் வட்டி விகித கொள்கையை கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
மேலும், அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது கனேடிய டொலரின் மதிப்பு குறைவதால், கனடாவுக்கு தேவையான இறக்குமதி பொருட்கள் விலை உயர்வடையும்.
இத்தகைய நிலை உருவானால், கனடிய interest rate-களில் மாற்றம் ஏற்பட்டு, கனேடிய டொலரின் மதிப்பு அமெரிக்காவின் பணமதிப்பில் 70 சென்டுக்கு கீழ் குறையலாம். (1 CAD = 0.70 USD)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canadian Dollar, US Dollar, CAD to USD, USD to CAD, Canada Interest rate, US Interset rate, Donald Trump