ஜாம்பவான் பீலே 1,000 கோல்கள் அடித்திருக்கிறாரா? வெளியான உண்மை பின்னணி
கால்பந்து உலகின் சகாப்தம் என கொண்டாடப்படும் பீலே தமது விளையாட்டு வாழ்க்கையில் 1,000 கோல்கள் அடித்துள்ளதாக கொண்டாடப்படுவதன் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.
கால்பந்து உலகின் சகாப்தம்
பிரேசில் கால்பந்து அணியின் மூன்று முறை உலகக் கோப்பை வெற்றியாளரும், கால்பந்து உலகின் சகாப்தம் என கொண்டாடப்படுபவருமான பீலே தமது 82ம் வயதில் காலமாகியுள்ளார்.
@Shutterstock
பெருங்குடல் புற்றுநோயால் நீண்ட காலம் அவதிப்பட்டுவந்த பீலே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பீலே தமது இளவயதிலேயே உலகக் கோப்பையை வென்றுள்ளதுடன், மொத்தமாக 1,281 கோல்கள் அடித்துள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
526 கோல்கள்
FIFA அமைப்பும் இந்த எண்ணிக்கையை உறுதி செய்துள்ளதுடன், கின்னஸ் சாதனையாகவும் பதிவானது. ஆனால், இந்த எண்ணிக்கையில் 526 கோல்கள் உண்மையில் நட்பு ரீதியான ஆட்டங்களில் பதிவானது என கூறப்படுகிறது.
இருப்பினும், அவரது கால்பந்தாட்ட காலகட்டத்தில் 700 கோல்கள் என்ற சாதனையை பதிவு செய்துள்ளது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
பிரேசில் அணிக்காக மட்டும் அவர் 77 கோல்கள் பதிவு செய்துள்ளார். மேலும், அவர் பங்கேற்ற நான்கு உலகக் கோப்பைகளில் மூன்றை பிரேசில் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.