பிரித்தானியாவில் வாடகைக்கு கணவர்கள்? எழுந்த சர்ச்சை.. உண்மை இதுதான்
பிரித்தானியாவில் Husband 4 Hire என்ற சேவை வாடகைக்கு கணவர்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வைரலாகியுள்ளது.
தனிப்பட்ட உறவுக்காக வாடகைக்கு
உலகின் சில நாடுகளில் பலதார மணம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், லாட்வியா மற்றும் பிரித்தானியாவில் வாடகைக்கு விடப்படும் கணவன் என்ற சேவை உள்ளது. 
உண்மையில் இது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும். தனிப்பட்ட உறவுக்காக துணையை வாடகைக்கு எடுப்பதாக இந்த சேவையை பிற நாடுகளில் தவறாக புரிந்துகொள்கின்றனர்.
அதாவது, வீட்டுப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைக்குதான் Husband 4 Hire அல்லது Hire A Hubby என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய கலாச்சாரத்தில்
பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் சில நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.
இதில் பணியமர்த்தப்படும் ஆண்கள், வீடுகளில் அல்லது அலுவலகங்களில் செய்ய வேண்டிய சிறிய சிறிய பழுதுபார்க்கும் வேலைகள் சீரமைப்புப் பணிகள், வீட்டு உபயோக பொருட்களை இணைத்தல், எலெக்ட்ரிக்கல் போன்ற வேலைகளை செய்வார்கள்.
பாரம்பரிய மேற்கத்திய கலாச்சாரத்தில் இதுபோன்ற வேலைகளை வீட்டில் கணவர்கள்தான் செய்வார். அதனாலேயே இந்த சேவைக்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |