சாந்தன் இறப்பிற்கு பின்னால் இருக்கும் உண்மை - சட்டத்தரணியின் அதிர்ச்சி தகவல்
ரஜீல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட சாந்தன் இயற்கையான முறையில் உயிரிழக்கவில்லை என சட்டத்தரணி ஜான்சன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சட்டத்தரணியின் அதிர்ச்சி தகவல்
ரஜீல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட சாந்தன் நேற்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தீர்பில் விடுவிக்கப்பட்ட பின்னரும் அயல் நாட்டவரின் சட்டத்தின் பெயரில் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் சாந்தன் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல் நிலை மிக மோசமாக கவலைக்கிடமாக இருந்த சூழ்நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலமானார்.
இது உடல் நல குறைவால் ஏற்பட்ட மரணம் என்று கூறுவது தவறு. இது ஒரு வகையான படுகொலையாக தான் பார்க்க வேண்டும் என நேர்காணலில் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த காணொளியை பார்வையிடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |