வெறும் தண்ணீரை குடிப்பதை விட இப்படி குடித்து பாருங்கள்! நன்மைகள் ஏராளம்
தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வித ஆரோக்கியத்தை கொடுக்கின்றது. ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து நான்கு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் உடல் மட்டும் இல்ல முகமும் பொலிவுடைய உதவுகின்றது.
வெறும் தண்ணீரை குடிக்க சலிப்பாக இருந்தால் மாறுதலாக லெமன், இஞ்சி, புதினா போன்றவற்றை சேர்த்து குடித்து பாருங்கள். அவ்வாறு குடிக்கும் போது சுவை மற்றும் ஏராளமான நன்மைகளை தருகின்றது.
இந்த நீரை எப்படி தயாரிப்பது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
எலுமிச்சை பழம்
புதினா
இஞ்சி
செய்முறை:-
ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அதில் எலுமிச்சை சாறு, புதினா, சிறிதாக நறுக்கப்பட்ட இஞ்சி மற்றும் உப்பு அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அவை சிறிது நேரம் ஊறிய பிறகு அவற்றை நன்கு கலந்தால் சத்தான குடிநீர் தயார்.
பலன்கள்:-
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வைரஸ் தொற்று மற்றும் தொண்டை புண்ணை எதிர்த்துப் போராடுகிறது. இது மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளுடன் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
புதினா செரிமானத்திற்கு உதவுகிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வை மேம்படுத்தவும் பயன்படுகிறது. மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவை கொண்டதாகவும் இது உள்ளது.
மிளகு உடல் எடையை குறைக்க உதவதோடு, உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது புற்றுநோயைத் தடுக்கவும், குடல் மற்றும் வயிற்றை சுத்தப்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.