மசாலா பொடியில் விஷம்! மனைவி குடும்பத்தை கொல்ல திட்டமிட்ட இன்ஜினியர்
தெலுங்கானா மாநிலம் தராபாத்தில் உள்ள மியாபுர் கோகுல் அப்பார்ட்மெண்டை சேர்ந்தவர் அனுமந்த ராவ் , இவரது மனைவி உமா மகேஸ்வரி.
இவர்களது மகள் ஷிரிஷா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான அசோக் குமாருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் லண்டனில் வேலைபார்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வசித்து வந்தனர்.
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இருந்த அசோக் குமார் மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தை கொள்ள திட்டமிட்டார்.
அதன்படி தன்னிடம் வேலை செய்து வந்த வினோத்குமாரிடம் ஆலோசனை கேட்டார்.
இந்த நிலையில் ஷிரிஷாவின் குடும்பத்தினர் குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றுள்ள தகவலை அறிந்த அசோக் குமார் இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக மாற்றி கொள்ள நினைத்து மூன்று நபர்களை விஷ ஊசி போட்டு கொலை செய்ய அனுப்பிவைத்தார்.
அந்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து குடியிருப்பின் காவலாளியின் மகன் ரமேஷ் மூலம் மசாலா பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடிகளில் மெதுவாக கொள்ளும் விஷத்தினை கலந்து மனைவி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
விஷம் கலந்த மசாலா பொடிகளை சமையல் செய்து சாப்பிட்டதால் ஷிரிஷாவின் தந்தை , தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் என 6 பேருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு கை கால்கள் செயலழிந்தன.
மேலும் சிகிச்சைபெற்றுவந்த ஷிரிஷாவின் தாய் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சோதனை முடிவில் மசாலா பொருட்களில் மெதுவாக கொள்ளும் விஷத்தினை கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஷிரிஷா போலீஸில் புகாரளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் காவலாளி மகன் ரமேஷ் மசாலா பொடிகளை கொடுத்தது தெரியவந்துள்ளது. போலீசார் ரமேஷை விசாரித்தததில் அசோக் குமார் கூறியபடி பூர்ணேந்திர ராவ் விஷம் கலந்த மசாலா பொருட்களை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.
போலீசார் இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். மேலும் லண்டனில் உள்ள அசோக் குமாரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |