சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்ததால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வீரர்: வைரலாகும் வீடியோ
மாஸ்டர் லீக் டி20யில் சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்த தென் ஆப்பிரிக்க வீரர், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் 8 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
𝐎𝐎𝐏𝐒! 𝐈 𝐃𝐈𝐃 𝐈𝐓! 😬
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 1, 2025
Thandi Tshabalala gets Sachin out… and instantly feels the weight of a billion fans! 💔
📺 Catch the action LIVE ➡ on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! 📲#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/qxxsLJHQD7
அவர் ஷாபலலாவின் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவர் முடிந்து ஷாபலலா ஃபீல்டிங்கிற்கு திரும்பினார்.
வீடியோ வைரல்
அப்போது ரசிகர்கள் அவர் ரசிகர்களை நோக்கி சச்சினை அவுட் செய்ததற்காக மன்னிப்பு கோரினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மார்ச் 5ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில், இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |