சைரன் ஒலி கேட்டால் பயப்படவேண்டாம்: இரண்டு பிரெஞ்சு நகரங்களுக்கு ஒரு அறிவிப்பு
Tsunami warning exercise to take place in Nice and Cannes on Monday: திங்கட்கிழமை, பிரான்சிலுள்ள நீஸ் மற்றும் கேன்ஸ் நகரங்களில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் ஒத்திகை ஒன்று நடைபெற உள்ளது.
நீங்கள் பிரான்சிலுள்ள நீஸ் மற்றும் கேன்ஸ் நகரங்களில் வாழ்வீர்களானால், திங்கட்கிழமையன்று திடீரென சைரன் ஒலி கேட்டால் பயப்படவேண்டாம் என மக்களை அறிவுறுத்தியுள்ளன பிரெஞ்சு ஊடகங்கள்!
சைரன் ஒலி கேட்டால் பயப்படவேண்டாம்
ஆம், திங்கட்கிழமை மதியம், நீஸ் மற்றும் கேன்ஸ் நகரங்களில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் ஒத்திகை ஒன்று நடைபெற உள்ளது.

திங்கட்கிழமை மதியம், 2.00 மணி முதல் 4.00 மணி வரை இந்த ஒத்திகை நடைபெற உள்ளது.
அப்போது, சைரன் ஒலி, வானொலியில் எச்சரிக்கை மற்றும் மொபைல்களிலும் எச்சரிக்கை செய்திகள் என ஒரே நேரத்தில் பல விடயங்கள் நடைபெற உள்ளன.
சுனாமி ஏற்படும் பட்சத்தில், அதிகாரிகள் அதை எவ்வாறு திறம்பட மக்களுக்குத் தெரிவிக்கமுடியும் என்பதை அறிவதற்காகவே செய்வதற்காகவே இந்த சோதனை முயற்சி.
ஆகவே, சைரன் ஒலி கேட்டால் மக்கள் பயப்படவேண்டாம் என்றும், அவர்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், மக்கள் அவசர உதவியை அழைக்கவேண்டாம் என்றும், சமூக ஊடகங்களில் போலியான செய்திகளைப் பரப்பவேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.